லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர்

லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர்

1 mins read

சென்னை: புகார் கொடுக்க வந்தவரிடம் நவீன கைபேசியை லஞ்சமாகப் பெற்ற காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் என்ற அந்த ஆய்வாளரிடம் சென்னையைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனில் ஐஃபோன் வாங்கித் தர வேண்டும் என சுரேஷ் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

மேலும் கைபேசியை பெற்றுக் கொண்ட பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்சம் பெற்ற புகாரின் பேரில் அவர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.