சுடச் சுடச் செய்திகள்

ஒரே சமயத்தில் ஊர் திரும்பிய பொது மக்கள்: சென்னையில் நிலைகுத்திய போக்குவரத்து 

தஞ்சை: தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்த மக்கள், சென்னை திரும்பியதால் நேற்று முன்தினம் மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதனால் வாகனமோட்டிகள் அவதிக்குள் ளாகினர்.

மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 18ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் புனித வெள்ளி, மகாவீர் ஜெயந்தி ஆகிய தினங்களும் ஒரு சேர அமைந்ததுடன், சனி, ஞாயிற்றுக் கிழமைகளும் அடுத்த டுத்து வந்ததால் தமிழகத்தில் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு லட்சக்    கணக்கானோர் சொந்த ஊர்க   ளுக்குப் புறப்பட்டுச் சென்றனர். 

தேர்தலில் வாக்களித்த பின்னர் தொடர் விடுமுறையை அனுபவித்து மகிழ்ந்த ஏராளமானோர், நேற்று முன்தினம் சென்னை திரும்பினர். ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்    கானோர் சென்னை திரும்பியதால், தேசிய நெடுஞ்சாலைகளில் வாக     னங்கள் அணிவகுத்தன. சென்   னைக்கு அருகே உள்ள செங்கல்  பட்டு, பெருங்குளத்தூர், ஊரப்    பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நிலைகுத்தின.

பல இடங்களில் போக்கு வரத்து நிலைகுத்தியது. நூற்றுக் கணக்கான வாகனங்கள் திரண்     டதால் அவை அங்குலம் அங்குல மாக நகர்ந்தன. போக்குவரத்து போலிசார் வாகன நெரிசலை சீரமைக்க பல மணி நேரம் போராட வேண்டியிருந்தது.

இதே போல் சென்னை மாந    கருக்குள்ளும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது. வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ரயில்கள் மூலம் சென்னை திரும்பியதால், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

வெளியூர் சென்றவர்கள் சென்னைக்குத் திரும்ப அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சென்னைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன என்பது குறிப் பிடத்தக்கது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon