அரசியல் கட்சியினரின் அத்துமீறல் தொடர்பில் அரசிடம் நீதிமன்றம் கேள்வி

அரசியல் கட்சியினரின் அத்துமீறல் தொடர்பில் அரசிடம் நீதிமன்றம் கேள்வி

2 mins read

சென்னை: தேசிய நெடுஞ்சாலை களைப் பராமரிக்க எத்தகைய நட வடிக்கை மேற்கொள்ளப்படுகின் றன என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக தொடுக்கப் பட்ட வழக்கை விசாரித்த போது, அரசியல் கட்சியினர் தங்களது வாகனங்களில் கட்சிக்கொடி கட்டி, தலைவர்களின் படங்களை அச்சிட்டும், தங்கள் வகிக்கும் பதவிகளை எழுதியும் வாகனங் களை இயக்குவதற்கு மோட்டார் வாகனச் சட்டப்படி அனுமதி உள் ளதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மதுரையைச் சேர்ந்த வழக்கறி ஞர் பி.ஸ்டாலின் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், நெடுஞ்சாலை களை அமைத்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது மட்டுமே அர சின் பணியாக உள்ளது என்றும் சாலைகளைப் பராமரிக்கும் பணி தனியாருக்கு ஒப்படைக்கப்படுகி றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நெடுஞ்சாலைகளில் தற்போது விபத்துகள் அதிக அளவில் நடப்பதாகவும், இருசக் கர, நான்கு சக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட எல்இடி விளக் குகளைப் பொருத்தி உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். "இந்த விளக்கொளியால் எதிரே வரும் வாகனங்கள் விபத் தில் சிக்குகின்றன.

"விதியை மீறி அதிக ஒளி வீசும் விளக்குகளை பொருத்தி வாகனங்கள் ஓட்டுவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்ப தில்லை," என்று குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர் ஸ்டாலின், சாலை விபத்துகளைக் குறைக்க தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை முறையாகப் பயன்படுத்த உத்தர விட வேண்டும் எனக் கோரி யுள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாகனங்களில் சீனநாட்டு எல்இடி விளக்குகள் மற்றும் ஒரே வாகனத் தில் அதிக எண்ணிக்கையிலான விளக்குகளைப் பொருத்த சட்டம் அனுமதிக்கிறதா? எனக் கேள்வி எழுப்பினர்.

"அரசியல் கட்சியினரின் இதுபோன்ற செயல்கள் போலி சாரையும், பொதுமக்களையும் மிரட்டுவது போல் உள்ளது. இந்தச் செயல்களுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? இவற்றுக்கு தடை விதித்தாலே 50 விழுக்காடு குற்றச்செயல்கள் குறைந்துவிடும்," என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.