பொன்பரப்பியில் சேதமடைந்த 48 வீடுகள் சீரமைப்பு

பொன்பரப்பியில் சேதமடைந்த 48 வீடுகள் சீரமைப்பு

1 mins read

அரியலூர்: பொன்பரப்பி கிராமத்தில் சேதமடைந்த வீடுகளைச் சீரமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பணி இன்னும் ஓரிரு தினங்களில் முடிவடையும் என எதிர் பார்க்கப்படும் நிலையில், கிராமத்தில் மேற்கொண்டு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வகையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று இரு தரப்பினரிடையே திடீர் மோதல் வெடித்தது.

இதில் 8 பேர் காயமடைந்தனர். மேலும் அக்கிராமத்தில் ஏராளமான வீடுகள் சேதப்படுத்தப்பட் டன. மொத்தம் 48 வீடுகள் சேதமடைந்ததாக தெரிய வந்ததது.

இதையடுத்து அந்த வீடுகளில் புதிய ஓடுகளைப் பொருத்துவதுடன், மரச் சட்டங்களை மாற்றுவதற்கும் உத்தரவிடப்பட்டது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவு, கண்காணிப்பின் பேரில் இந்தப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தப் பணிகள் ஓரிரு தினங்க ளில் முடிவடைய உள்ளன.

இதற்கிடையே பொன்பரப்பி கிராமத்தில் மீண்டும் மோதல்கள் நிகழா வண்ணம் காவல்துறை தனது கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி உள்ளது.

அங்கு போலிசார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.