வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்

2 mins read
b601f858-4a8e-4717-823d-490f47412e22
-

சென்னை: வங்கக் கடலில் வரும் 29ஆம் தேதி புயல் சின்னம் உரு வாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய புயலானது, சென்னை, நாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் அம்மையம் கூறியுள்ளது.

கடந்த இரு தினங்களாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கோடை வெயிலால் தவித்து வந்த மக்களுக்கு இந்த திடீர் மழை மகிழ்ச்சி அளித்துள்ளது.

இந்நிலையில் இந்தியப் பெருங் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் வரும் 25ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

"இது புயல் சின்னமாக வலுவடைந்து, 29ஆம் தேதியில் இருந்து தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும். இந்தப் புயல் சின்னம் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

"இந்த புயல் சின்னம் சென்னைக்கும் நாகப்பட்டினத் துக்கும் இடையே கரையைக் கடக்கவும் வாய்ப்புள்ளது," என்று புவியரசன் கூறினார்.

இதற்கிடையே, சேலம் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழையால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் சேதம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் மதியம் திடீரென கனமழை பெய்தது. அப்போது வீசிய சூறைக்காற்றில் வீடுகளின் கூரைகள் பறந்தன. ஆத்தூரில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனை அந்த பகுதி சிறுவர்கள் ஆர்வத்துடன் சேகரித்தனர்.

தம்மம்பட்டி, செந்தாரப் பட்டி, நாகியம்பட்டி, கொண்டையம்பள்ளி, கூடமலை, கிருஷ்ணாபுரம், தெடாவூர், வீரகனூர் ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஓமலூர், காடையாம்பட்டி பகுதியில் பெய்த கனமழையில் சிக்கனம்பட்டி, குப்பூர் உள்பட பல பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் சேதம் அடைந்தன.

இதற்கிடையே திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களிலும் நேற்று முன்தினம் கன மழை பெய்தது.

இதனால் மன்னார்குடி உள் ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.