நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை தென்காசி, செங்கோட்டை, ஆலங் குளம் பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ததால் அந்தப் பகுதிகளில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையுடன் சூறைக்காற்றும் வீசியது.
தூத்துக்குடி மாவட்டம் கயத் தாறு, கோவில்பட்டி, கழுகுமலை பகுதியிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அதிகபட்சமாக கயத்தாறு பகுதியில் 45 மி.மீ. மழை பெய்தது. கழுகுமலையில் 10 மி.மீ., கோவில்பட்டியில் 6 மி.மீ. மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஆய்க் குடியில் 15.2 மி.மீ., தென்காசியில் 14.3 மி.மீ., சங்கரன் கோவிலில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை, கோவை, தஞ்சை, திருவண்ணாமலை மாவட்டங்களி லும் நேற்று முன்தினம் மழைப் பொழிவு இருந்தது.
மழையின்போது காற்றும் பல மாக வீசுவதால் பல்வேறு இடங் களில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்களும் சேதம் அடைந்துள்ளன. இதுகுறித்து விவசாயிகள் தாலுகா அலுவலகங்களில் புகார் செய்துள்ளனர்.
மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குற்றாலம் அருவிகளிலும் நீர்வரத்து அதி கரித்தது.
இன்று முதல் தென்மேற்கு வங்கக்கடல், இந்தியப் பெருங் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக இருப் பதால் அந்தப் பகுதிகளில் மீனவர் கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

