புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த ஐவர் குழு

புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த ஐவர் குழு

1 mins read

சென்னை: குற்றவழக்குகளில் புலன் விசாரணை தரத்தை மேம் படுத்த சென்னை உயர்நீதிமன்றம் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற டிஜிபி ஆர்.நட்ராஜ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழு, குற்றவாளிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வு தொடர்பான நடைமுறைகளைக் கண்டறியும் பணியில் ஈடுபடும் என உயர் நீதிமன்றம் அறிவித் துள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், "குற்றவாளிகள் மீது திரும்பத் திரும்ப வழக்குகள் போட்டு அவர்கள் மீண்டும் திருந்த முடியாத நிலைக்கு ஆளாக்கப் படுகிறார்கள்.

"குற்றவாளிகள் எப்போதும் குற்றவாளிகளாகவே வைத் திருக்கப்படுவது மிகுந்த வேத னைக்குரியது," எனக் கூறி உள்ளது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழு, குற்றவாளிகளின் மறுவாழ்வு குறித்து ஆராய்ந்து அடுத்த எட்டு வாரங்களில் டிஜிபிக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு 264 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குற்ற வழக்குகளில் காவல்துறை யினரின் புலன் விசாரணைத் தரம் தாழ்ந்துவிட்டதாக வேதனை தெரிவித்திருந்தார்.