ஃபேஸ்புக்­ வழி வைடூரியம் கொள்ளை

ஃபேஸ்புக்­ வழி வைடூரியம் கொள்ளை

1 mins read

சென்னை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டி­னத்தைச்­ சேர்ந்த சீனிவாச ராவ், 53, என்ற வைர வியாபாரியை ஃபேஸ்புக்­ மூலம் தொடர்புகொண்டு தங்­க­ளுக்கு வைடூரியம் உடனே தேவை என்று சொல்லி அவரை ஒரு கும்பல் வரவழைத்­தது. சீனிவாச ராவ் சென்னை வந்­த­தும் அவரிடம் கத்தி­யைக் காட்டி ரூ.21 லட்சம் மதிப்­பி­லான வைடூரியக்­ கற்­களை அந்தக்­ கும்பல் பறித்துச்­ சென்றுவிட்டது. போலி­சில் புகார் அளி­க்­கப்பட்­டதை அடுத்து விசாரணை நடக்­கிறது.