ஏப்ரல் 30ல் புயல் கரை­யைக் கடக்­கும்

ஏப்ரல் 30ல் புயல் கரை­யைக் கடக்­கும்

1 mins read

சென்னை: தமிழ்நாட்­டில் வரும் 30ஆம் தேதி புயல் கரை­யைக் கடக்­கும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்­கிறது.

­தென்கிழக்கு வங்கக்­ கட­லில் உருவாகியுள்ள காற்றழுத்­தத் தாழ்வுப்­ பகுதி, அடுத்த 36 மணி நேரத்­தில் காற்றழுத்­தத் தாழ்வு மண்டலமாக மாறும், கடும் மழை பெய்­யும் என்­றும் மையம் கூறியது.

அந்தக்­ காற்றழுத்­தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி­ கரை யேறக்கூ­டும் என்­றும் தெரிவித்­ துள்ள அந்த மையம், இன்று முதல் மீன­வர்கள் யாரும் கடலுக்­ குச்­ செல்லக்கூடாது என்­றும் அறி­ வுறுத்தி இருக்­கிறது.

இந்தப்­ புயலுக்கு 'ஃபானி' என்று பெயர் சூட்டப்­படும் வாய்ப்பு உள்ளதாக­வும் தகவல்கள் கூறின.

இதனிடையே, கன்னியாகுமரி மேற்­குக் கடற்கரை கிராமங்­க­ளில் கடல் சீற்­றத்து­டன் காணப்­படு கிறது. 50க்­கும் அதிக வீடு­க­ளில் கடல்நீர் புகுந்­து­விட்டதாக­வும் தகவல்கள் தெரிவித்­தன.

கடல் அலைகள் 10 அடி வரை எழும்புவதாக­வும் மீன­வர்கள் கடலுக்­குச்­ செல்லாததால் 500க்­ கும் மேற்பட்ட நாட்டுப்­ படகுகள் கரையிலேயே நிறுத்தப்பட்டு இருப்­ பதாக­வும் தகவல்கள் கூறின.

இவ்­வ­ேளை­யில், நாகை மாவட் டம் வேதாரண்யம் அருகே மீன் பிடிக்­கச் சென்ற நான்கு மீன­வர் கள் கரை திரும்ப­வில்லை என் பதால் அவர்­களை உள்ளூர் மீன வர்கள் படகு மூலம் தேடி வருவ தாக நேற்று தெரிவி­க்­கப்பட்டது.