சென்னை: சென்னை மாதவரம் - சோழிங்கநல்லூர் நகர ரயில் திட்டத்துக்காக 2,865 வீடுகளும் கடைகளும் இடிக்கப்படுகின்றன. பாதிக்கப் படுவோருக்கு ரூ.10,000 கோடி இழப்பீடு வழங்கப்படுகிறது.
சென்னை மாநகர்ப் போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப் படுகிறது. முதல் கட்டமாக கோயம்பேடு, ஆலந்தூர், சின்னமலை, விமான நிலையம் வரை மேல்மட்டப் பாதையும் திருமங்கலம், சென்ட்ரல், சைதாப்பேட்டை, வண்ணாரப் பேட்டை வரை சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கியது.
மாதவரம் - சோழிங்க நல்லூர் வரை 118.9 கி.மீ. வழித்தடம் இரண்டாவது கட்டமாக உருவாக்கப் படுகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.
இந்த ரயில் திட்டத்தால் 2,865 குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. 777 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளன. சிறுசேரி, சிப்காட் பகுதிகளில் 97 குடும்பத்தினர் வீடுகளையும் 279 பேர் கடைகள், வணிகப் பகுதிகளையும் இழந்துள்ளனர்.

