பிறப்­புச்­ சான்றிதழு­டன் பிள்ளைகள் விற்பனை

பிறப்­புச்­ சான்றிதழு­டன் பிள்ளைகள் விற்பனை

2 mins read

ராசிபுரம்: தமிழ்நாட்­டில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதி­யில் பிறப்­புச்­ சான்றிதழு­டன் குழந்தை கள் விற்கப்­படுவதாகப்­ பரபரப்பு கிளம்பி இருக்­கிறது.

­பத்து ஆண்டுகள் தாதியாக வேலை­பார்த்த அமுதா என்ற பெண்மணி, தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு குழந்தை விற்பனை தொழி­லில் முழுமூச்சாக ஈடுபட்டு வருவதாகக்­ கூறும் ஓர் ஒலிப்பதிவு இணை­யத்­தில் அதிர்ச்­ சியைக் கிளப்பி ­வருகிறது.

இதை­யடுத்து இந்த விவகாரம் தொடர்­பில் முதற்கட்ட விசாரணை யைத் தொடங்­கும்படி தமிழக அர­சின் சுகாதா­ரத்துறை உத்தரவு பிறப்­பித்து இருக்­கிறது.

சிவப்பு நி­றத்­தில் மூன்று கிலோ எடையுள்ள ஆண் குழந்தை வேண்டு­மானால் ரூ.4 லட்­சத் துக்கு வாங்கலாம் என்­றும் பெண் குழந்தை என்றால் ரூ.3 லட்சம் கொடுத்­தால் போதும் என்­றும் சொல்லி குழந்தை விற்ப­னைத் தொழி­லில் ஒரு பெரும் கும்பலே செயல்பட்டு வந்திருப்பதாகக்­ கூறப்­படுகிறது.

கூடுதலாக ரூ.70,000 கொடுத்­ தால் பிறப்­புச்­ சான்றித­ழும் பெற்றுத்­ தரப்­படும் என்­றும் தெரிகிறது.

இணை­யத்­தில் புழங்­கும் ஒலி நாடாவைச்­ செவி­மடுக்கை­யில், அதில் அமுதா என்ற பெண்மணி, தான் 30 ஆண்டு காலமாக குழந் தைகளை வாங்கி விற்று வருவ தாக­வும் இதற்காகவே தான் இரு ஆண்டு­க­ளுக்கு முன் வேலையை விட்டதாக­வும் கூறுவதைக்­ கேட்க முடிகிறது.

குழந்தைக­ளின் விவரம், முன் பணமாக ரூ.30,000 கொடுக்க வேண்­டிய நிபந்­தனை எல்லாம் அந்த ஒலிப்பதி­வில் இடம்பெற்று இருக்­கின்றன. இந்த விவகாரம் வெளிச்­சத்துக்கு வந்­ததை­யடுத்து அமுதாவைக்­ கைதுசெய்து போலிஸ் விசாரித்து ­வருகிறது.

இந்தச்­ சட்டவிரோத குழந்தை விற்ப­னைத் தொழி­லில் ஈடுபட்டு இருக்­கும் கும்பல், வெளிமாநிலங் க­ளில் இருந்­தும் குழந்தை­களைத்­ திருடி வந்து விற்பதாக­வும் இந்தக்­ கும்பலுக்­குப்­ பல்வேறு தொண்டு நிறுவனங்­க­ளு­டன் தொடர்பு இருப்பதாக­வும் கூறப்­படுகிறது.

தமிழ்நாட்­டில் குழந்தை­யைத் தத்­தெடுப்பது என்பது சட்ட ரீதி யில் பெரிய ஒரு பிரச்­சினையாக இருப்பதால் குழந்தை பாக்­கியம் இல்லாத தம்பதி­களை இந்தக்­ கும்பல் அணுகுகிறது.

ஏழைக்­ குடும்பங்­க­ளில் பிறக்­ கும் குழந்தைகள், தவ­றான நடத்தையால் பிறக்­கும் குழந்தை கள் ஆகியவற்றை அத்தகைய பிள்ளை­யில்லாத தம்பதியிடம் விற்று இந்தக்­ கும்பல் பெரும் காசு பார்க்­கிறது என்று கூறப்­படுகிறது.

இந்தச்­ சட்டவிரோத காரியம் பற்றி­ அதிகாரிகள் இப்­போது பரபரப்பாக விசாரணை­யைத் தொடங்கி இருக்­கி­றார்கள்.