சென்னை: பொள்ளாச்சி, பெரம் பலூர் பாலியல் கொடுமைகள் தொடர்பில் முதல்வர் பழனிசாமியை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமை யாக எச்சரித்துள்ளார்.
பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளும் கட்சியின் முக்கியப் புள்ளி களுக்கு எதிரான ஆதாரங்களை எல்லாம் அழித்துவிட்டு, பிறகு சிபிஐயிடம் வழக்கு விசார ணையை ஒப்படைக்கலாம் என்று முதல்வர் முயலக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
அதேபோல், பெரம்பலூர் விவ காரத்தைக் மூடி மறைத்து அதிமுக எம்எல்ஏவைக் காப்பாற்றிவிடலாம் என்று முதல்வர் கனவில்கூட நினைத்துவிடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொள்ளாச்சி பாலியல் விவ காரம் அடங்குவதற்கு முன்பே பெரம்பலூர் பாலியல் சம்பவம் பற்றி தெரியவந்து இருப்பது தமிழக மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்குப் பெரும் அதிர்ச்சி யையும் பயத்தையும் ஏற்படுத்தி இருப்பதாகவும் இந்த இரண்டு விவகாரங்களையும் மூடி மறைக் கும் விதத்தில் அதிமுக அரசு செயல்படுவது வருத்தமாக இருக் கிறது என்றும் ஸ்டாலின் தெரி வித்து இருக்கிறார்.
பெண்களைப் பயத்திலும் பதற் றத்திலும் வைத்து இருப்பது ஓர் அரசுக்கு அழகல்ல என்பதையும் தான் வகிக்கும் பதவிக்கும் அது அழகல்ல என்பதையும் முதல்வர் உணரவேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய் யப்பட்ட ஐந்து பேர் மீதும் கூடுதல் பாலியல் வன்கொடுமை என்ற பிரிவின் கீழ் சிபிசிஐடி போலிஸ் மேலும் குற்றங்களைச் சுமத்தியது. இவை ஆயுள் தண்டனைக்கு வழி வகுப்பவையாகும்.

