ஆலந்தூர்: சென்னையில் இருந்து அகமதாபாத்துக்கு நேற்றுக்காலை 6.50 மணிக்கு 179 பயணிகளுடன் ஓடுபாதையில் ஒரு விமானம் நகர்ந்துகொண்டு இருந்தபோது இயந்திரத்தில் கோளாறு இருந்தது விமானிக்குத் தெரிந்தது. உடனே பயணிகள் கீழே இறக் கப்பட்டனர். விமானக் கோளாற் றைச் சரிசெய்யும் பணியில் அதி காரிகள் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு விமானத்தில் அனுப்பிவைக்கப் படுவார்கள் என்று விமான நிர் வாகம் அறிவித்ததை அடுத்து அவர்கள் காத்திருந்தனர்.
விமானம் மேலே எழும்ப இருந்த நேரத்தில் இயந்திரக் கோளாறு
1 mins read

