நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற் பனை செய்யப்பட்ட விவகாரத்தில் 12 குழுக்கள் அமைத்து விசா ரணை நடக்கிறது. அவை கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த 4,500 குழந்தைகளின் பிறப்புச் சான் றிதழ்களைச் சரிபார்க்கும். இந்த விவகாரம் தொடர்பில் அமுதா என்ற தாதி, அவரின் கணவர் உட்பட 4 பேர் கைதாகி உள்ளனர். அமுதாவுக்குத் தமி ழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முகவர்கள் இருக்கிறார்கள் என் பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து இருக்கிறது.
குழந்தைகள் விற்பனை: விசாரிக்க 12 குழுக்கள்
1 mins read

