தீவிரவாதி கைது: விசாரணை தீவிரம்

சென்னை: சென்னை­யில் அமிஞ் சிக்கரை­யில் தனி­யார் மருத்­துவ மனை ஒன்­றில் வேலை பார்க்­கும் மேற்கு வங்கா­ளத்தைச்­ சேர்ந்த கந்தர்பதாஸ், 24, என்ற நக்சலைட் தீவிரவாதி­யைக் கைதுசெய்து போலிஸ் விசாரித்து ­வருகிறது.

இந்த நபர், மேற்கு வங்கா­ளத் தில் தீவிரவாத செய­லில் ஈடுபட்ட தற்காக சிறை­யில் இருந்த­வர். அங்கு பிணை­யில் வெளிவந்த இவர், சென்னை வந்து வேலை யில் சேர்ந்து இருக்­கி­றார். 

இந்த ஆசாமி சென்னை வந் தது ஏன் என்பது தொடர்­பில் போலிஸ் விசாரித்து ­வருகிறது. 

இந்த நபர் உல்ஃபா பயங்கர வாத அமைப்பைச்­ சேர்ந்தவராக இருக்கலாம் என்­றும் சந்தேகி­க்­கப் படுகிறது. 

இலங்கை குண்டுவெடிப்­புகள் தொடர்­பில் சென்னை­யில் போலிஸ் பாதுகாப்­பும் சோதனை­க­ளும் அதிகரித்­துள்ள நிலை­யில் இந்த நபர் பிடிபட்டு இருப்பது பல சந் தேகங்­களை எழுப்­பியுள்­ளது. 

இதனிடையே, சென்னை­யில் பல இடங்­க­ளில் குண்டு வைத்து இருப்பதாக தொலைபேசி­யில் மிரட்டல் விடுத்த மைக்கேல் பிரீடி என்ப­வரை போலிஸ் மும்முரமா­கத் தேடி வருகிறது. 

35 குண்டர்கள் பிடிபட்­டனர்

சேலம்: சேலம் மாநகரப்­ பகுதி க­ளில் பல்வேறு குற்றச்­ சம்பவங் க­ளில் தொடர்புடைய 35க்­கும் மேற்பட்ட குண்டர்­களை போலிஸ் கைது செய்து உள்­ளது. 

  கைது நடவடிக்கை தொட­ரும் என்று சேலம் மாநகரக்­ காவல் ஆணை­யர் எச்சரித்­துள்­ளார். 

கொலை, கொள்ளை, வழிப்­ பறி, அச்­சுறுத்தல் போன்ற பல் வேறு சம்பவங்­க­ளில் ஈடுபட்ட இந்தக்­ குண்டர்கள் பல காவல் நிலையங்­க­ளில் அடை­க்­கப்பட்டு உள்­ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon