தினக­ரன் ஆதரவு எம்எல்ஏ­க்­கள் தகுதி இழக்கக்கூடிய நிலை

தினக­ரன் ஆதரவு எம்எல்ஏ­க்­கள் தகுதி இழக்கக்கூடிய நிலை

1 mins read

சென்னை: தினக­ரன் ஆதரவு எம்எல்ஏ­க்­கள் தகுதி நீக்­கம் செய் யப்படலாம் என்று தகவல் வெளி யானதால் அரசியல் களத்­தில் பரபரப்பு கூடி இருக்­கிறது.

அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதி, விருத்­தாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்­வன், கள்ளக்­குறிச்சி எம்எல்ஏ பிரபு மூவரும் தினக­ரன் ஆதரவாளர்­க­ளாக உள்­ளனர்.

இரட்டை இலை சின்­னத்­தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிமுன் அன்சாரி, திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண் டார். இந்த நிலை­யில், அதிமுக கொறடா ராஜேந்திர­னும் சட்­டத் துறை அமைச்சர் சிவி சண்முக மும் நேற்று சபாநாயகர் தனபாலை சந்­தித்துப்­ பேசி­னர்.

அந்த எம்எல்ஏ­க்­கள் அதிமுக வுக்கு எதிராக செயல்­படுவதற்­கான காணொளி ஆதாரங்­களைத்­ தாக்­ கல் செய்து அவர்­களைத்­ தகுதி நீக்­கம் செய்யக்­ கோரி சபாநாயகர் தனபாலிடம் அதிமுக கொறடா ராஜேந்தி­ரன் பரிந்­துரை செய்­தார்.

அ­வர்­க­ளுக்கு விளக்கக்­ கடிதம் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்துள்ளதாக­வும் எம்எல்ஏக்­ களின் பதிலைப்­ பொறுத்து அடுத்த நடவடிக்கை எடு­க்­கப் படும் என்­றும் தெரியவந்­து­ள்­ளது.