திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு மலேசியாவுக்கு செல்லவிருந்த பயணி ஒருவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். சிவகங்கையைச் சேர்ந்த பயணி ஒருவரின் கைப்பையில் மலேசியாவிற்கு கடத்த இருந்த இருமல் மருந்து போன்ற பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த போதைப்பொருளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அவை போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அந்தப் போதைப்பொருள் யாரிடம் வாங்கப்பட்டது என்பது குறித்து போலிசார் அந்தப் பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

