சுடச் சுடச் செய்திகள்

‘திமுக நம்பிக்கையில்லாத்  தீர்மானம் கொண்டு வரும்’

சென்னை: மூன்று சட்டமன்ற உறுப் பினர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்தால், அவர் மீது திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மே 23ம் தேதி 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளை எதிர் நோக்கி இருக்கும் நிலையில்,  சட்ட அமைச்சர் சி.வி.சண்­முகம், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர்  பேர வைத் தலைவரை சந்­தித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தா சலம் கலைச்­செல்­வன் ஆகிய மூவர் மீதும் கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருப்பதற்கு கடுமை­யான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒருவேளை நடுநிலைமை தவறி பேரவைத் தலைவர் அந்த சட்ட­மன்ற உறுப்பினர்கள் மீது நட­வடிக்கை எடுத்தால், பேரவைத் தலை­வர் மீது திமுக சார்பில் நம்பிக்­கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்­படும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்,” என்றார் ஸ்டாலின். 

இந்நிலையில் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுள் ஒருவரான கள்ளக்குறிச்சி பிரபு, இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்­கெடுப்பு நடந்தால், கொறடா உத்த­ரவின்படியே செயல் படுவேன். ஜெயலலிதா  ஆட்சி தொடர நாங்கள் பாடுபடுவோம் என்று கூறினார். தனக்கு சபாநாயகரிடம் இருந்து அதிகாரபூர்வ, ‘நோட்டீஸ்’ கிடைத்தவுடன், அதை சட்ட ரீதியாக சந்திப்போம்” என்றும் பிரபு தெரிவித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon