ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல்: 8 பேர் வேட்பு மனு தாக்கல்

ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல்: 8 பேர் வேட்பு மனு தாக்கல்

1 mins read

ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்த­லில் நேற்று திமுக வேட்பாளர் சண்முகையா உள்பட 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வெள்ளிக்கிழமை திமுக வேட்பாளர் சண்முகையா உள்பட 8 பேர் தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள்.

திமுகவின் மாற்று வேட்பாளராக அவரது உறவினர் அயிரவன் பட்டியைச் சேர்ந்த விஜி (36) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆஸ்டின், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மதிமுகவைச் சேர்ந்த புதுகோட்டை வழக்கறிஞர் செல்வம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சண்முகம்,

கன்னியாகுமரி எம்எல்ஏ ஆஸ்டின் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அகல்யா, பகுஜன் திராவிடக் கட்சியைச் சேர்ந்த கீழவல்லநாடு மலர் மகாராஜன்(29) உட்பட 7 பேரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று வரை 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான 29ம்தேதி அதிமுக, அமமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.