கோவை: பொள்ளாச்சியில் பாலி யல் கொடுமை விவகாரம் பற்றி புலன்விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலிசார், அதே காமக் கும்பலிடம் சிக்கிய 10க்கும் அதிக பெண்களை அடையாளம் கண்டு இருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் சந்தேகிக் கப்படும் நபர்களுக்கு எதிராக கிடைத்துள்ள சாட்சிகளின் அடிப்படையில் இந்த வழக்கில் மேலும் பல குற்றச்சாட்டுகள் சந் தேகப்பேர்வழிகள் மீது சுமத்தப் பட்டு இருக்கின்றன.
சிபிசிஐடி போலிசார் நடத்திய புலன்விசாரணைகள் மூலம் இந்தச் சந்தேகநபர்கள், தங் களிடம் சிக்கிய பெண்களிடம் மோசமான முறையில் பலாத்காரத் தைப் பயன்படுத்தி உள்ளனர் என்பது தெரியவந்து இருக்கிறது.
இதனிடையே, பொள்ளாச்சி பாலியல் சம்பவம் பற்றி விசாரிக்க டிஐஜி நிலைக்கு குறையாத பெண் அதிகாரி ஒருவரின் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக் கும்படி கேட்டு தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம், இதன் தொடர்பில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன் கொடுமை சம்பவத்தில் உண்மை யைக் கண்டுபிடிக்கும் நோக்கத் தில் உண்மை கண்டறியும் குழு வையும் பாதிக்கப்பட்ட பெண் களின் நலன்களை உத்தேசித்து அனைத்து மாவட்டங்களிலும் புகார் குழுவையும் அமைக்க உத் தரவிடும்படி நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் பற்றி முதன் முதலாகப் புகார் தெரிவித்த 19 வயதுப் பெண்ணின் பெயரை வெளியிட்டுவிட்ட போலிஸ் அதிகாரி பாண்டியராஜன் என்பவர் மீதும் உதவி ஆய்வாளர் ராஜேந் திர பிரசாத் என்பவர் மீதும் வழக்குப் பதியவேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
இதை விசாரித்த உயர் நீதிமன் றம் ஜூன் 7ஆம் தேதிக்குள் தமிழக அரசும் போலிஸ் துறையும் பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

