உருவானது புயல்; தமிழகம் பாதிக்கப்படும் வாய்ப்பு குறைவு

சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

அந்தப் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 1,125 கி.மீ. தொலை வில் நிலைகொண்டு இருந்ததாக வும் அது 24 மணி நேரத்தில் தொடர்ந்து வலுவடைந்து தீவிர புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர் களிடம் தெரிவித்தார். 

அந்தப் புயல் வடமேற்கு நோக்கி நகர்ந்து வரும் 30ஆம் தேதி மாலை வடதமிழகம், தெற்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும் என்றும் ஃபானி என்ற அந்தப் புயல் சென்னையை நெருங்குவதற் கான வாய்ப்பு குறைவு என்றும் அவர் கூறினார். 

திசைமாறும் காரணத்தால் ஃபானி புயல் வலுக்குறைய வாய்ப்பு இருப்பதாக அவர் குறிப் பிட்டார். 

இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே லேசான மழை பெய்யும் என்றும் வேறு பாதிப்புகள் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

புயல் பேரிடர் வாய்ப்பு குறைவு என்றாலும் வங்கக் கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அந்த வானிலை மைய அதிகாரி ஆலோ சனை கூறினார். 

இருந்தாலும் புயல் பேரிடரை  உத்தேசித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன என்று மாநில நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon