கடும் வெப்பம்: விலங்குகளைக் காக்க 48 வகையான நளபாகம்

கடும் வெப்பம்: விலங்குகளைக் காக்க 48 வகையான நளபாகம்

1 mins read

சென்னை: சென்னை கிண்டி தேசிய பூங்காவில் உள்ள விலங்கு களும் பறவைகளும் இப்போதைய கடும் வெப்பத்தால் பாதிக்கப்படா மல் இருப்பதை உறுதிப்படுத்த, பழங்கள், காய்கறிகள் ஆகிய வற்றை அதிகமாக பயன்படுத்தி 48 வகை உணவுகள் தயாரிக்கப் பட்டு கொடுக்கப்படுகின்றன. விலங்குகளும் பறவைகளும் அந்த உணவை விரும்பி சாப்பிடு கின்றன என்று அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். வெப்பம் கடுமையாக இருப்ப தால் கிண்டி தேசிய பூங்காவில் வெப்பம் தணிவதற்காக ஆங் காங்கே நீரைத் தேக்கிவைக்கவும் தண்ணீரைத் தெளிக்கவும் தொடர் முயற்சிகள் இடம்பெறுகின்றன.