சென்னை: தமிழ்நாட்டின் ராமநாத புரத்தில் பயங்கரவாதிகள் 19 பேர் ஊடுருவி இருப்பதாகவும் அவர் கள் தென்னிந்தியாவில் பல மாநி லங்களிலும் ரயில்களில் பயங்கர மான தாக்குதலை நடத்த திட்ட மிடுவதாகவும் கர்நாடக போலிஸ் அபாய சங்கு ஊதியதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் போலிசார் முழு விழிப்பு நிலையில் வைக்கப் பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடு படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
பேருந்து நிலையங்கள், ரயில், விமான நிலையங்கள் முக்கிய நிலைகள் எங்கும் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டு 24 மணி நேரமும் சோதனைகள் நடந்து வருகின்றன.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா, மகாராஷ் டிரா, புதுச்சேரி ஆகியவற்றுக்கு கர்நாடக போலிஸ் துறை கடிதம் ஒன்றை எழுதி அதில் பயங்கரவாத தாக்குதல் நடக்கவிருப்பது பற்றி எச்சரித்தது.
தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் 19 பயங்கவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும் அந்தக் கடிதம் தெரிவித்தது. இதன் தொடர்பில் முன்னாள் ராணுவ வீரரான சுவாமி சுந்தரமூர்த்தி என்ற லாரி ஓட்டுநர் போலிசுடன் தொடர்புகொண்டு தகவல்களைத் தெரிவித்ததாக அந்தக் கடிதம் குறிப்பிட்டது.
இலங்கையில் இன்னமும் பயங் கரவாதச் செயல்கள் அரங்கேற்றப் பட்டு வரும் நிலையில், தென்னிந் தியாவில் தாக்குதல் நடக்கப்போவ தாக மிரட்டல் விடுக்கப்பட்டதை மிக அவசரமானதாகக் கருதும் போலிஸ் உடனடியாக அந்த லாரி ஓட்டுநரைக் கைது செய்தது.
அந்த லாரி ஓட்டுநருக்கு இது போல போலியான செய்திகளைப் பரப்புவதே வேலை என்பது பின்னர் தெரியவந்தது.
இருந்தாலும் மெத்தனமாக இருக்கக்கூடாது என்பதால் தமிழ் நாடு போலிஸ் முழு விழிப்பு நிலை யில் இருந்து வருகிறது. மோப்ப நாய் உதவியுடன் பல இடங்களி லும் சோதனை நடக்கிறது.
இதனிடையே, ராமேசுவரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் வெடி குண்டு வைத்து இருப்பதாக போலிசுக்கு மிரட்டல் வந்ததை அடுத்து உடனடியாக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் அந்த மிரட்டல் உண்மை அல்ல என்பது தெரியவந்தது.
திருவண்ணாமலை கோயில், மதுரை விமானநிலையம், சேலம் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங் களில் பாதுகாப்புகள் கடுமையாக் கப்பட்டு இருக்கின்றன.
இதனிடையே, இலங்கையில் பல இடங்களிலும் குண்டுவைத் தது தான்தான் என்று சென்னை போலிசிடம் தெரிவித்த மைக்கல் பிரீடி என்பவரை கோயம் பேடு போலிசார் கைதுசெய்தனர்.
முன்னதாக, மூத்த போலிஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் கள் அனைவருக்கும் சுற்றறிக்கை களை அனுப்பி, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க கடுமையான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழக அரசு உத்தர விட்டது.

