சுடச் சுடச் செய்திகள்

குழந்தை கடத்தல் விவகாரம்: மேலும் பலர் பிடிபட்டனர்

நாமக்கல்: ராசிபுரம் குழந்தை கடத்தல் விவகாரத்தில் மேலும் 3 துணைத் தரகர்கள் கைதுசெய்யப் பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் ஆறு பேர் பிடிபட்டுள்ளனர். 

இதனிடையே, சேலம், கொல்லி மலை, தர்மபுரி, நாமக்கல், ஈரோட் டில் குழந்தைகள் வாங்கப்பட்டு கோவை, மதுரை, திருச்சி, மார்த் தாண்டத்தில் குழந்தைகள் விற்கப் பட்டுள்ளதாகத் தெரியவந்தது.

இந்நிலையில், ராசிபுரம் குழந்தை விற்பனைக் கும்பல், இலங்கை தம்பதிக்கு எட்டு லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்றுள்ள தாக போலிசில் தாக்கலான ஒரு புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ராசிபுரத்தைச் சேர்ந்த நல் வினை விஸ்வராஜூ என்பவர்  புகார் மனுத் தாக்கல் செய்தார்.

 நிலவாரப்பட்டியைச் சேர்ந்த வடிவேல்–அமுதா தம்பதிக்கு 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் பிறந்த ஒரு பெண் குழந்தை மறுநாளே தாதி அமுதா மூலம் ஈரோட்டைச் சேர்ந்த கோமதி யுவராஜ் என்ற தரகருக் குக் கைமாற்றப்பட்டதாக புகாரில் நல்வினை விஸ்வராஜூ தெரி வித்து இருக்கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon