அரவக்குறிச்சி: தமிழ்நாட்டில் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நான்கு தொகுதி களில் அரவக்குறிச்சி பலரும் ஒரு மித்த கவனம் செலுத்தும் தொகுதி யாக ஆகி இருக்கிறது.
அதிமுகவிலிருந்து அமமுக வுக்குத் தாவி அங்கிருந்து திமுக வுக்குத் தாவி இருக்கும் செந்தில் பாலாஜி, அந்தத் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.
அவரை எப்படியும் வீழ்த்தி ஆகவேண்டும் என்று எல்லா எதிர்க்கட்சிகளும் கங்கணம் கட் டிக்கொண்டு செயல்படுகின்றன.
இருந்தாலும் செந்தில் பாலாஜி யாருக்கும் சளைக்காமல் தீவிர மான வாக்குச் சேகரிப்பில் ஈடு பட்டுவருகிறார். அப்போதைக்கப் போது அதிமுகவுக்கும் திமுக வுக்கும் இடையில் இடம்பெறும் காரசாரமான வாக்குவாதங்களி லும் சுடச்சுட பதிலளித்து செந்தில் பாலாஜி பலரையும் திகைக்க வைத்து வருகிறார்.
அரவக்குறிச்சி தொகுதி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தன்னைத் தகுதி நீக்கம் செய்த அதிமுக அரசுக்குத் தகுந்த பாடம் புகட்டவேண்டும் என்று செந்தில் பாலாஜி மக்களிடம் கோரிக்கை வைத்து வருகிறார்.
ஆனால் அதிமுகவோ அரவக் குறிச்சியில் 50,000 வாக்கு வித்தியாசத்தில் இரட்டை இலை வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்று பேசி வருகிறது. இதற்குப் பதிலடியாக அதிமுக முதலில் 50,000 வாக்கு கள் வாங்கிக் காட்டட்டும் என்று செந்தில் பாலாஜி சவால்விட்டு வருகிறார்.
புலனாய்வு அமைப்பு தங்கள் கையில் இருப்பதாகவும் அதன் மூலம் அரவக்குறிச்சி மக்கள் அதிமுக பக்கம் இருக்கிறார்கள் என்பது தெரியவந்து இருப்பதாக வும் அதிமுக தரப்பு கூறுவதற்குப் பதிலளித்த செந்தில் பாலாஜி, திமுக நிர்வாகிகள், 'ரா' எனப்படும் இந்திய புலனாய்வுத் துறைக்கு ஒப்பானவர்கள் என்று பதில் கொடுத்து வருகிறார்.
அரவக்குறிச்சியில் தேர்தல் அனல் போகப்போக இன்னும் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.

