சுடச் சுடச் செய்திகள்

நடராஜன் போய் நாகராஜன் வந்தார்=தேர்தல் பணிகள் வேகம்

மதுரை: மதுரையில் வாக்குப் பதிவு  இயந்திரங்கள் வைக்கப் பட்டு இருக்கும் ஒரு மையத் துக்குள் சம்பூர்ணம் என்ற வட் டாட்சியர் நுழைந்ததன் தொடர் பில் மதுரை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான நட ராஜன் இடமாற்றப்பட்டார்.

அவருக்குப் பதிலாக பொது சுகாதாரம் மற்றும் நலத்துறையின் கூடுதல் இயக்குநராக இருந்த நாகராஜன் மாவட்ட ஆட்சியராக நேற்று பதவி ஏற்றார்.

உடனடியாக நாகராஜன் செய்தி யாளர்களைச் சந்தித்தார். திருப் பரங்குன்றம் இடைத்தேர்தலை யொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்படும் என்றாரவர். 

இப்போது உள்ள ஒன்பது பறக் கும் படையினரின் எண்ணிக்கை யும் அதிகரிக்கப்படும் என்று  திரு நாகராஜன் (படம்: தமிழக ஊடகம்) கூறினார்.

நடராஜன் பணியில் இருந்த போது மதுரை வாக்குப்பதிவு மையத்திற்குள் வட்டாட்சியர் சம் பூர்ணம் நுழைந்த சம்பவம் பூதாகர மாகக் கிளம்பியது.

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில், நடராஜனை மாற்றி உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. அதனால் நடராஜன் போய் நாகராஜன் வந்துள்ளார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்த லில் பணப்பட்டுவாடாவில் ஈடுபடு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய ஆட்சி யர் எச்சரித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon