சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமியைக் கொடைக்கான லில் கொலைசெய்யப்போவதாக கைத்தொலைபேசி மூலம் காவல் துறைக்கு மிரட்டல் வந்ததை அடுத்து சந்துரு என்பவரை போலிஸ் விசாரிக்கிறது.
முதல்வர் தேர்தல் பிரசாரம் தொடங்கும் நேரத்தில் மிரட்டல் வந்துள்ளதால் போலிஸ் இதில் தீவிர கவனம் செலுத்துகிறது.
இப்போது முதல்வருக்கு போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டு உள்ளது.

