கோவை: இலங்கையில் இம்மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று பல இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டன. அதற்கு முன்னதாக இலங்கையில் இருந்து மர்ம நபர் ஒருவர் கோவை நகருக்கு வந்து இருக்கிறார் என்பது தெரியவந்து உள்ளது.
இதன் காரணமாக, இந்தியா வின் தேசிய புலன்விசாரணை முகவையைச் சேர்ந்த அதிகாரிகள் கோவையில் ரகசியமான முறை யில் விசாரணை நடத்தி வருவ தாகத் தகவல்கள் கூறுகின்றன.
இலங்கையில் அரங்கேற்றப் பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிறது.
தமிழ்நாட்டின் கோவையில் சென்ற ஆண்டு ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கும் ஐஎஸ் அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது-.
அந்த ஆறு பேரும் இப்போது பிணையில் இருக்கிறார்கள். அவர்களை விசாரித்து வரும் இந்த முகவையைச் சேர்ந்த அதி காரிகள், தொடர் விசாரணையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
அந்த ஆறு பேரையும் இடை விடாமல் கண்காணித்து வரு கிறார்கள். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் இலங்கையைச் சேர்ந்த மர்ம நபர் ஒருவர் கோவை வந்து மூன்று நாட்கள் தங்கி யிருந்து சிலரை சந்தித்து இருக் கிறார் என்பதால் புலன்விசாரணை அதிகாரிகள் தங்களுடைய விசா ரணைகளை இப்போது முடுக்கி விட்டு இருக்கிறார்கள்.
அந்த நபருக்கும் ஐஎஸ் அமைப் பிற்கும் தொடர்பு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக் கிறார்கள். இதனால் இம்மாதம் 1ஆம் தேதி முதல் இலங்கையில் இருந்து கோவைக்கு விமானத் தில் வந்த பயணிகள் பட்டியல்கள் முற்றிலும் அலசி ஆராயப்படு கின்றன.
கோவை நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள ஹோட் டல்கள், விடுதிகளில் அதிகாரி கள் ரகசிய விசாரணைகளையும் திடீர் திடீர் சோதனைகளையும் நடத்தி வருகிறார்கள் என்று ஊட கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

