6 வயது சிறுவனுக்கு உலக விருது

6 வயது சிறுவனுக்கு உலக விருது

1 mins read

பவானி: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த ஜித்தேஷ் என்ற 6 வயது சிறுவன் உலக அளவில் நடந்த பல்வேறு யோகா போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்திய சாதனைப் புத்தகத்திலும் பதஞ்சலி சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளான். இதைப் பாராட்டி ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்த விழாவில், நோபல் உலக சாதனைகள் அமைப்பு சார்பில், உலக இளம் யோகா சாதனையாளர் விருது சிறுவனுக்கு வழங்கப்பட்டது.