உயிரைக் கொடுத்து பாம்பைக் கொன்று உறவைக் காத்த பப்பி

உயிரைக் கொடுத்து பாம்பைக் கொன்று உறவைக் காத்த பப்பி

2 mins read

தஞ்சாவூர்: தஞ்சை அருகே வேங்கராயன் குடிக்காடு பகுதியைச் சேர்ந்த நடராஜன், 50, என்ற விவசாயி குடும்பம் இன்னமும் கண்ணீர் விட்டபடியே இருக்கிறது.

நடராஜனும் அவரின் மனைவியான தேவகியும் இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆண் நாய்க்குட்டி ஒன்றை வீட்டுக் குக் கொண்டுவந்து பப்பி என்று அதற்குப் பெயர் சூட்டி அதை பேச இயலாத பிள்ளை யாக அவர்கள் வளர்த்து வந்தனர்.

பப்பிக்கு நாற்காலி பிடிக்கும் என்பதால் அதற்காகவே நடராஜன் ஒரு நாற்காலியை வாங்கினார். அதில் பப்பி தூங்கும். அன் றாடம் காலையில் பப்பியுடன் நடராஜன் வயலுக்குச் செல்வார். நடராஜன் மேல் தூசு துரும்பு படாமல் பப்பி காத்துவந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை யில் பப்பியுடன் வயலுக்குச் சென்றபோது வழியில் ஒரு நல்ல பாம்பு நடராஜனைக் கண்டு சீறியது. நடராஜன் கம்பை எடுத்து வர ஓடினார். ஆனால் பாம்பைக் பார்த்து விட்ட பப்பி உடனே அதன் மீது பாய்ந்து அதன் வாயைக் கடித்துக் குதறி பாம்பைக் கொன்றுவிட்டது.

இதனிடையே, பாம்பை அடிக்க கழி யுடன் ஓடிவந்த நடராஜன், பாம்பு செத்து விட்டதைக் கண்டு பப்பியைப் பார்த்த போது அது வாலை ஆட்டியபடியே நின்று கொண்டு இருந்தது.

மகிழ்ச்சியில் நாயை தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் ஓடிய நடராஜன் நடந்ததை குடும்பத்தாரிடம் கூறினார்.

அதைக்கேட்டு ஆளுக்கு ஆள் பப்பியை கட்டி அணைத்துக்கொஞ்சினர். சில நிமிடங்களில் பப்பி துவளத் தொடங் கியது. அதை உணர்ந்த குடும்பத்தார் பதறியபடி மருத்துவமனைக்குப் போவ தற்கு முன்பே செல்ல பிள்ளை பப்பி இறந்து சோகத்தை ஏற்படுத்திவிட்டது.