ஒரு குடம் குடிநீர் பத்து ரூபாய்

ஒரு குடம் குடிநீர் பத்து ரூபாய்

1 mins read

நீலகிரி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் ஒரு குடம் தண்ணீரைப் பத்து ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர். நீலகிரியின் முக்கிய நீராதாரமான ரேலியா அணையில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் அந்த அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.