தினகரன்: குழந்தைக் கடத்தல் குறித்து விசாரிக்க சிறப்புக்குழு

தினகரன்: குழந்தைக் கடத்தல் குறித்து விசாரிக்க சிறப்புக்குழு

1 mins read

சென்னை: குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்தது தொடர்பில் விருப்ப ஓய்வு பெற்ற அரசு செவிலியர் உள்ளிட்ட எழுவர் கைதாகி உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இத்தகைய முறையீடு காவல்துறை, அரசு மருத்துவமனை உயர் அதிகாரிகளுக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைக் கடத்தல், விற்பனை தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சிறப்புக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.