சமய நல்லிணக்கத்தை வலுப்படுத்த விருந்துபசரிப்பு

சமய நல்லிணக்கத்தை வலுப்படுத்த விருந்துபசரிப்பு

1 mins read

மதுரை: இந்துக்கள், இஸ்லாமியர் கள் இடையேயான ஒற்றுமையையும் சமய நல்லிணக்கத்தையும் வலுப் படுத்தும் வகையில், மேலூர் அருகே விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கல்லம்பட்டி. இங்குள்ள தர்காவில் ஆண்டு தோறும் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி, விருந்து உபசரிப்பு விழா நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் மத நல்லிணக் கத்தை வலியுறுத்தியும் மழை பெய்ய வேண்டியும் நேற்று முன் தினம் இங்கு கிடாக்கறிக் கஞ்சி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது.

இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இஸ்லாமியர்கள் கிடாக்கறிக் கஞ்சி ஊற்றி உபசரித்தனர்.

இதையடுத்து உலக ஒற்றுமைக் காகவும் விவசாயம் செழிக்க வேண்டியும் தொழில் வளம் பெருக வேண்டியும் தர்காவில் இஸ்லா மியர்கள் பிரார்த்தனை மேற்கொண் டனர்.

இதையடுத்து, விருந்துபசரிப்பு ஏற்பாட்டாளர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டு களைத் தெரிவித்துள்ளனர்.