போலிசாராக நடித்து ரூ.11 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை

போலிசாராக நடித்து ரூ.11 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை

2 mins read

சென்னை: காவல்துறையினர் போல் நடித்து நகைக்கடை ஊழியர்களிடம் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களுக்கு வலைவீசப் பட்டுள்ளது.

சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள அமெதீஸ்ட் நகைக் கடையில் வெளிநாட்டினரின் ரச னைக்கேற்ப விலை உயர்ந்த நகை கள் விற்பனை செய்யப்படுகின்றன.

கிரண் ராவ் என்பவருக்குச் சொந்தமான இந்த நகைக் கடைக்கு, நேற்று முன்தினம் மாலை கடை ஊழியர்கள் மதுரை யில் இருந்து ஏராளமான நகை களை எடுத்துக்கொண்டு சென் னைக்கு வந்து கொண்டிருந் தனர்.

நகைக்கடை மேலாளர் தயாநிதி உள்ளிட்ட 4 ஊழியர்கள் நகைகள் கொண்டு வரப்பட்ட காரில் இருந் தனர். செங்கல்பட்டு சோதனைச் சாவடிக்கு அருகே வந்தபோது நகைக்கடை ஊழியர்களின் காரை மற்றொரு கார் முந்திச் சென்று வழிமறித்து நின்றது.

அந்த காரில் இருந்து போலிஸ் சீருடை அணிந்த இருவரும் சாதாரண உடையில் ஐவரும் இறங்கி வந்தனர். பின்னர் நகைக்கடை ஊழியர்களிடம் தாங் கள் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசார் என்றும் நகைக் கடை அதிபர் கிரண் ராவ் மீது சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குப் பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து, அந்த எழுவரும் நகைக் கடை ஊழியர்கள் வந்த காரில் சோதனை நடத்தினர். அப் போது காரில் இருந்த 11 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் 7.5 லட்சம் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்வதாகக் கூறினர்.

சென்னையில் உள்ள நகைக் கடைக்கு தாங்கள் செல்லப்போவ தாகவும் தங்களைப் பின் தொடர்ந்து வருமாறும் ஊழியர் களிடம் தெரிவித்தனர். ஆனால் நகைக்கடை ஊழியர்கள் தங்க ளின் கடைக்குச் சென்று பார்த்த போது அங்கு போலிசார் யாரும் வரவில்லை என்பது தெரிய வந்தது. பதறிப்போன நகைக்கடை நிர்வாகம், இது குறித்து போலி சிடம் புகார் அளித்துள்ளது.

இதற்கிடையே, இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

விமானத்தில் வந்த பயணிகளி டம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது திருச்சியை சேர்ந்த அப்துல் ரஹீம் ரியாஸ் என்பவர் சோதனைக்கு ஒத்து ழைக்காமல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, அவரை தீவிர மாகச் சோதித்தபோது தனது உடலுக்குள் அவர் தங்கக் கட்டி களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.