25 நாட்களில் ஆட்சி மாற்றம்  நிகழும் என்கிறார் துரைமுருகன்

சென்னை: அதிமுகவினர் ஒவ் வொரு வாக்குக்கும் ஐந்து முதல் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாவது வெற்றி பெற வேண்டும் என கணக்குப் போட்டுள்ளதாக திமுக பொருளாளர் துரைமுருகன் கூறி உள்ளார்.

சூலூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், அதிமுகவினருக்கு மக்கள் மீதுள்ள நம்பிக்கை போய்விட்டது என்றும் பணத்தை நம்பி தேர்தலில் போட்டியிகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

“ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன் றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுகதான் வெற்றிபெறும் என்பது நூறு விழுக்காடு உறுதி.

“இந்த சூலூர் தொகுதியில் திமுகவை வெற்றிபெறச் செய்யுங் கள். அப்படி நடக்கும் பட்சத்தில், நடப்பு அதிமுக ஆட்சியை 

25 நாட்களுக்குள் மாற்றும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள் கிறேன்,” என்றார் துரைமுருகன்.

அதிமுக நடத்தும் கூத்துகள் எல்லாம் வாக்கு எண்ணிக்கை முடிந்த மறுநாளோடு முடிவுக்கு வரும் என்று குறிப்பிட்ட அவர், பிரதமர் நரேந்திர மோடியைப்போல் வெறுப்பைச் சம்பாதித்த ஒரு பிரதமரை உலகத்தில் எங்குமே பார்த்தது இல்லை என்றார்.

மோடி மீண்டும் பிரதமராக வருவதற்கு வாய்ப்பே கிடையாது என்றும் துரைமுருகன் திட்டவட்ட மாகத் தெரிவித்தார்.

“இது என்னுடைய அரசியல் சோதிடம் அல்ல, அரசியல் அனு பவம். அடுத்த மூன்று மாதங் களுக்குள் உரிமை பெற்ற தமிழ கத்தின் முதல்வராக ஸ்டாலின் பதவியில் அமர்வார். தற்போது ஸ்டாலின் என்ற பெயர் இந்தியா வின் எட்டுத்திக்கிலும் ஒலிக் கிறது,” என்றார் துரைமுருகன்.

இதற்கிடையே, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், மே 23ஆம் தேதிக்குப் பிறகு அரசியல் களத்தில் மு.க.ஸ்டாலின் பூஜ்ஜிய மாகி விடுவார் என்றார்.

அதிமுக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால்தான் மூன்று எம்எல்ஏக்களைத் தகுதிநீக்கம் செய்ய முயல்வதாக சிலர் கூறு வது முற்றிலும் தவறான கருத்து என்று குறிப்பிட்ட அவர், அத் தகைய நெருக்கடி எதுவும் தங்களுக்கு இல்லை என்றார்.

“ஜூன் 30ஆம் தேதி திமுக ஆட்சி அமையும் என்று துரை  முருகன் கூறுகிறார். திண்டுக்கல் பெரியசாமியோ 11 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வந்ததும் திமுக ஆட்சி அமைக்கும் என்கிறார். இரண்    டுமே நடக்கப்போவதில்லை.

“திமுக தலைவராக கருணா நிதி இருந்தபோதே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை,” என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon