சுடச் சுடச் செய்திகள்

நெல்லையில் கோர விபத்து: ஐந்து பேர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே சரக்கு லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்தக் கோர விபத்தில் தந்தை, 3 வயது மகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். 

திருநெல்வேலி கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் தனது 3 வயது மகள் தனிஷ்கா மற்றும் உறவினர்களான முருகன், நிரஞ்சன்குமார், மகேஷ், ஆகியோருடன் உறவினர் ஒருவரின் திருமண விருந்திற்காக ஆலங்குளத்தை அடுத்த அடைக் கலப்பட்டினத்திற்கு இறைச்சி வாங்கக் காரில் சென்று கொண்டி ருந்தார். 

அவர்கள் சென்றுகொண் டிருந்த கார் கரும்புலியூத்து என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது தென்காசியிலிருந்து நெல்லை நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் கார் லாரிக்கு அடியில் சென்று நொறுங்கியது. 

காரில் பயணம் செய்துகொண் டிருந்த அனைவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந் தனர்.  லாரிக்கு அடியில் இருந்து காரை மீட்ட போலிசார், சிதைந்த கார் பாகங்களைக் கடப்பாறை உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு அகற்றி உடல்களை மீட்டனர். 

விபத்து குறித்து ஆலங்குளம் போலிசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். லாரி ஓட்டுநர் குறித்து தகவல் வெளியாகவில்லை.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon