திரையரங்கில் தீ; ரசிகர்கள் ஓட்டம்

கன்னியாகுமரி: களியக்காவிளையில் உள்ள அங்குள்ள ‘தமீன்ஸ் மேக்ஸ்’ என்ற திரையரங்கில் நேற்று முன்தினம் மலையாளத் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தபோது திரையரங்க கட்டுப்பாட்டு அறையில் திடீரென தீப்பற்றியதால் அங்கிருந்து புகை கிளம்பியது. இதைக் கண்டதும் ரசிகர்கள் திரையரங்கில் இருந்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக, கேரளாவின் பாறசாலை, தமிழகத்தின் குழித்துறை என இரு மாநில தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வெகுநேரம் போராடி தீயை அணைத்தனர்.

‘புரொஜெக்டர்’ எனும் படங்காட்டும் கருவி, குளிரூட்டி உட்பட ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. இதையடுத்து, அந்தத் திரையரங்கில் நேற்று எல்லாக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon