கோமதிக்கு மேலும் ரூ.20 லட்சம் பரிசு

கோமதிக்கு மேலும் ரூ.20 லட்சம் பரிசு

1 mins read

சென்னை: கத்தாரில் நடந்த 23வது ஆசிய திடல்தட வெற்றியாளர் போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவைப் பாராட்டி, அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

அதேபோல, நடிகர் விஜய் சேதுபதி தம்முடைய ரசிகர் மன்றம் மூலமாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அவரிடம் வழங்கினார். முன்னதாக, திமுக ரூ.10 லட்சமும் தமிழக காங்கிரஸ் ரூ.5 லட்சமும் நடிகர் ரோபோ சங்கர் ரூ.1 லட்சமும் கோமதிக்குப் பரிசாக வழங்கியிருந்தனர்.