நீதிமன்றம்: காதலிக்குமாறு பெண்ணை வற்புறுத்தக்கூடாது

சென்னை: தன்னைக் காதலிக்கு மாறு ஒரு பெண்ணை வற்புறுத்த எந்த ஓர் ஆணுக்கும் உரிமை கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை திருவான்மியூரில் கவின் என்ற ஆடவர் தன்னை மணந்துகொள்ள மறுத்த பெண் ணைக் கத்தியால் குத்தினார். இதையடுத்து, அவரை போலிஸ் கைது செய்தது. இந்த வழக்கில் தன்னைப் பிணையில் விடுவிக்கக் கோரி கவின் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

கவினின் பிணை மனுவை ஏற்க மறுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அவருக்கு மனநல ஆலோசனை வழங்கவும் உத்தர விட்டார்.

அப்போது, “தன்னைக் காத லிக்கும்படியோ, திருமணம் செய்து கொள்ளும்படியோ ஒரு பெண்ணை வற்புறுத்த ஆணுக்கு உரிமை இல்லை. பெண் என்பவர், தான் சொன்னபடியெல்லாம் கேட்டு நடந்துகொள்ள வேண்டும் என்று ஆண் நினைப்பதே இதுபோன்ற சம்பவங்கள் நிகழக் காரணம். ஒரு பெண் பழகும் விதத்தைக் கொண்டே அவரை மணந்து கொள்ள வேண்டும் என்ற எண் ணத்தை விதைக்கிறது. எனினும், அதனை ஏற்க அந்தப் பெண் மறுக்கும்பட்சத்தில் அவரைக் கத்தி யால் குத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது,” என்று நீதிபதி கூறினார்.

அத்துடன், பெண்கள் தாக்கப் படும் சம்பவங்களில் தவறிழைத்த ஆண்களுக்குக் கருணை காட்டு வது, மன்னித்து விடுவிப்பது போன்ற செயல்களை நீதிமன்றங் கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றங்கள் சமூகத் திற்குத் தேவையான உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத் தினார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon