ஃபானி புயல்: தமிழகத்திற்கு ரூ.309 கோடி நிதி

ஃபானி புயல்: தமிழகத்திற்கு ரூ.309 கோடி நிதி

1 mins read

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஃபானி புயல் இன்று கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்வதற்காக தமிழ் நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங் களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

ஃபானி புயல் இன்று மாலை ஒடிசாவை நெருங்க வாய்ப்புள்ள தாகக் கணிக்கப்பட்டுள்ளது. அப் போது தமிழகம், ஆந்திரா, புதுச் சேரி கடலோரப் பகுதிகளில் 50-60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தேசிய அவசர கால மேலாண்மைக் குழு அளித்த தகவலின் அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ரூ.309.375 கோடியை மத்திய உள்துறை அமைச்சு தமிழகத்திற்கு ஒதுக்கி இருக்கிறது.

அதேபோல, ஆந்திராவிற்கு ரூ.200 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ.235 கோடி, ஒடிசாவிற்கு ரூ.340 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.