சுடச் சுடச் செய்திகள்

கர்ப்பிணி மரணம்; போலி மருத்துவர் முத்துலட்சுமி கைது

நெகமம்: கர்ப்பிணிப் பெண் ஒரு வர் கருக்கலைப்பு செய்யப்பட்ட போது உயிரிழந்த சம்பவம் தொடர்பாகப் போலி மருத்துவர் முத்துலட்சுமி கைது செய்யப்பட் டார்.

ஐந்து பிள்ளைகளுக்குத் தாயான 37 வயது வனிதாமணி மீண்டும் கர்ப்பம் அடைந்ததால், கருக்கலைப்பு செய்ய அவர் முடிவு செய்தார்.

வடசித்தூரில் உள்ள யேகோ வாநி‌ஷி ஆயுர்வேத மையத்தில் உள்ள முத்துலட்சுமியும் அவரது மகன் கார்த்திக்கும் வனிதா மணிக்குக் கருக்கலைப்பு ஊசி போட்டனர். இதையடுத்து அவர் உடல்நிலை மோசமடைந்து உயிர் இழந்தார்.

இது குறித்து மேற்கொள்ளப் பட்ட விசாரணையில், முத்து லட்சுமி போலி மருத்துவர் என் பது தெரியவந்தது.

முத்துலட்சுமி டி.ஏ.எம்.எஸ். என்ற படிப்புப் படித்து உள்ளதாக கூறி வந்துள்ளார். ஆனால் அப் படி ஒரு படிப்பு இல்லை எனக் குடும்ப நலத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணா கூறினார்.

வனிதாமணி இறந்ததைத் தொடர்ந்து முத்துலட்சுமியும், அவரது மகன் கார்த்திக்கும் தலைமறைவாகி விட்டனர். அவர் களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இதற்கிடையே போலி பெண் மருத்துவர் முத்துலட்சுமி நாகப் பட்டினத்தில் உள்ள தனது தோழி வீட்டில் பதுங்கி இருப்ப தாகத் தனிப்படை காவல்துறை யினருக்குத் தகவல் கிடைத்தது.

நேற்று முன்தினம் இரவு அங்கு விரைந்து சென்ற நெகமம் போலிசார் முத்துலட்சுமியைக் கைது செய்தனர்.

முத்துலட்சுமியின் மகன் தொடர்ந்து தலைமறைவாக உள் ளார். போலிசார்  அவரை வலை வீசித் தேடி வருகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளாக வட சித்தூர் பகுதியில் மருத்துவ மனை நடத்தி வந்த முத்துலட்சுமி கடந்த 2018ஆம் ஆண்டு மாவட்ட மருத்துவ அலுவலர்கள் சோதனை நடத்த வந்தபோது அங்கிருந்து ஓடிவிட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon