புதுக்கோட்டை: பொன்னமராவதி கலவரத்துக்குக் காரணமான 'வாட்ஸ்ஆப்' ஒலிப்பதிவு வெளியிட்ட விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் செல்வராஜ், வசந்த், சிங்கப்பூரில் பணியாற்றிய செல்வகுமார் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக பேராவூரணி பகுதியில் பிரகாஷ் பாலாஜி மற்று சபரி, ரெங்கையன் ஆகியோரைத் தனிப்படை காவல்துறையினர் வளைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஒலிப்பதிவின் மறுமுனையில் பேசியதாக முருகேசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து திருமயம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

