இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: சென்னையில் வசிக்கும் மூவரிடம் விடிய விடிய விசாரணை

சென்னை: உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னை பூந்தமல்லி யில் வசித்து வந்த ஒருவர் உட்பட இலங்கையைச் சேர்ந்த 3 பேரிடம் தேசிய புலனாய்வுத் துறையினர் விடிய விடிய விசாரணை மேற் கொண்டனர்.

இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்ட ஜஹ்ரன் ஹாசிம் என்ற தீவிரவாதி யின் கூட்டாளியான ஹசன் தற் கொலைப் படை தாக்குதலில் பலி யான தீவிரவாதிகளில் ஒருவனாக இருக்கக்கூடும் எனக் கருதப்படு கிறது.

இந்நிலையில் குண்டுவெடிப் புக்கு ஒரு வாரத்துக்கு முன் ஹசன் சென்னை மண்ணடிக்கு வந்து சென்றதாகக் கிடைத்த தகவலை அடுத்து தேசிய புல னாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மண்ணடியில் ஒருவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சந் தேகத்திற்கிடமான சிலர் சென்னை பூந்தமல்லியில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து பூந்தமல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 11வது மாடியில் வசித்து வரும் 3 பேரிடம் தேசியப் புலனாய்வுத்துறை யினர் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

இதனிடையே அந்த மூன்று பேரில் ஒருவரான துனுகா ரோஷன் என்பவர் கடந்த ஓராண்டாகக் கடவுச்சீட்டு உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றி சென்னையில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இலங்கையில் அவர் மீது கொலை வழக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து துனுகா ரோஷனை போலிசார் கைது செய் தனர். மற்ற இருவரிடமும் தேசிய புலனாய்வுத் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

கேரளாவில் தாக்குதல்

நடத்த திட்டம்

இதற்கிடையே, கடலோர கேர ளாவில் பிடிபட்ட தீவிரவாதி புத்தாண்டு தினத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்ட மிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரளாவின் பாலக்காடு, காசர் கோட்டில் உள்ள 3 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கைதான 29 வயது அபுபக்கர் ரியாஸ் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

கேரளாவில் இவர் தற்கொலை படை தாக்குதல் நடத்தத் திட்ட மிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. அவர் தனது கைத்தொலைபேசியில் இருந்து இலங்கைக்குப் பலமுறை தொடர்புகொண்டுள்ளார்.

மேலும் வாட்ஸ்ஆப் உட்பட சமூக ஊடகங்கள் வாயிலாகவும் இலங்கையில் உள்ளவர்களிடம் பல தகவல்களைப் பரிமாறியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த காசர்கோட்டைச் சேர்ந்த 16 பேரில் அபுபக்கர் ரியாசும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அபுபக்கர் ரியாசிடம் நடந்த 12 மணி நேர விசாரணையின் போது, "கேரளாவில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமாகக் கூடும் இடத்தில் தற் கொலை படை தாக்குதலை நடத்த நான் திட்டமிட்டிருந்தேன்.

"கேரளாவில் இருந்து ஆப் கானிஸ்தான், சிரியா சென்று ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் தான் இதற்கான திட்டத்தை எனக்கு வழங்கினர்.

"தாக்குதல் நடத்த தேவையான வெடிகுண்டுகள் உட்பட பொருட் களை அவர்களே அனுப்பி வைப்ப தாகவும் கூறினர்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!