'திமுக, அமமுக இடையே நெருக்கம்'

'திமுக, அமமுக இடையே நெருக்கம்'

1 mins read

சென்னை: திமுகவுக்கும் அமமுகவுக்கும் இடையே உள்ள நெருக்கம் வெட்டவெளிச்சமாகியுள்ளது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

புதன்கிழமை அன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர், சட்டப் பேரவைத் தலைவர் மீது எதிர்க்கட்சியினர் எந்த அடிப்படையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகின்றனர் என்பது தெரிய வில்லை," என்றார்.

"கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூவர் மீது நடவடிக்கை எடுத்தால் திமுக தலைவர் ஸ்டாலின் கொந்தளிப்பது ஏன். சட்டமன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் திமுக, அமமுக இடையே நெருக்கம் வெட்டவெளிச்சமாகி உள்ளது," என்று அவர் சொன்னார்.

"தமிழகத்தில் குடிநீர்ப் பிரச்னை எங்கும் ஏற்படக் கூடாது என்பதற்காகத் தேர்தலுக்கு முன்பாகவே ஆலோசனை நடத்தப்பட்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"அதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்," என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.