நீர்நிலைகளின் பரப்பளவை அளவிட நீதிமன்றம் உத்தரவு

நீர்நிலைகளின் பரப்பளவை அளவிட நீதிமன்றம் உத்தரவு

1 mins read

சென்னை: கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழ கத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து நிறைந்த சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில், நீர்நிலைகளை பாது காக்காவிட்டால் எதிர்கால சந்ததியினர் பாட்டில்களில்தான் நீரை பார்க்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பரப்பளவை 6 மாதங்களில் அளவிட வேண்டும். அரசு, இலவசங்களுக்கு நிதியை ஒதுக்குவதற்குப் பதில் வீணாகும் நீரை தடுக்க அணைகளை கட்டலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். நீர் சேமிப்பு பகுதி களை பாதுகாக்காவிட்டால் தண் ணீருக்கு பிற மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய நாள் தெலைவில் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தமிழகம் முழு வதும் உள்ள நீர்நிலைகளின் பரப்பளவை 6 மாதங்களில் அள விட வேண்டும் என நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர்.

சதுப்பு நிலத்தில் அரசு அலு வலகங்கள் கட்டுவது என்பது வேலியே பயிரை மேய்வதுபோல் உள்ளது என நீதிபதிகள் இதற்கு முன்னர் கூறியிருந்தனர்.