ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது மறவப்பட்டி கிராமம். இங்குள்ள முத்தாலம்மன் கோவிலில் சித் திரைத் திருவிழா மூன்று நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இத்திருவிழாவின்போது மாமன், மைத்துனன் உறவு முறைகளைக் கொண்டவர்களை ஒருவரை ஒரு வர் துடைப்பத்தால் அடித்துக்கொள் வதை வழக்கமாக கொண்டுள்ள னர் அக்கிராமத்தினர்.
திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று முன்தினம் இந்த விநோத நிகழ்வு நடைபெற்றது.
மேலும், சேற்றில் படுத்து உருண்டு உடல் முழுவதும் சேறு ஒட்டிய பின்னர் தங்களின் உற வினர்களை அழைத்து துடைப்பத் தால் அடிவாங்கிக் கொள்ளும் நிகழ்வும் நடந்தது. திருவிழாவைக் காண அருகில் இருக்கும் கிராமங் களைச் சேர்ந்தவர்கள் மறவப்பட் டிக்கு படையெடுத்துவந்தனர்.
"என்னதான் ஊரே சேர்ந்து மாமன், மைத்துனன் உறவுகளை துடைப்பத்தால் வெளுத்து வாங் கினாலும் மற்ற ஊர்க்காரர்கள் மீது துடைப்பம் பட்டுவிடாமல் கவனமாக விழா நடக்கும். துடைப் பத்தால் அடிக்கும்போது உறவு மேம்படும், தோஷங்கள் நீங்கும்," என்கிறார்கள் மறவப்பட்டி கிராமத்தினர்.

