பொன்னமராவதி விவகாரத்தில் சிங்கப்பூர் பணிப்பெண்ணை தமிழகம் வரவழைத்து கைது

பொன்னமராவதி கலவரத்துக்குக் காரணமான ஒலிப்பதிவு ஒன்றை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட விவ காரத்தில் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவரை தமிழகத் துக்கு வரவழைத்து விமான நிலையத்திலேயே போலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த ஒலிப்பதிவு பரவலுக்கு மூலகாரணமாக சிங்கப்பூரில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணி புரிந்த கனிமொழி, 40, எனும் பெண் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. தஞ்சாவூர் அருகில் உள்ள திருமங்கலக்கோட்டை மாதவன் குடிக்காட்டைச் சேர்ந்த கனிமொழி சிங்கப்பூரில் 10 ஆண்டுகளாகப் பணிபுரிந்தார் என்று கூறப்பட்டது. ஒலிப்பதிவில் உரையாடிய இரண் டாவது நபர் இவர் என்று கூறப் படுகிறது.
சிங்கப்பூரிலுள்ள இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் கனி மொழியை தமிழகத்துக்கு வர வழைத்த போலிசார் அவரை திருச்சி விமான நிலையத்திலேயே கைது செய்து ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் செல்வராஜையும் அவரது சமூகத் தையும் 2 பேர் அவதூறாக பேசும் ஒலிப்பதிவு கடந்த மாதம் 17ஆம் தேதி சமூக வலைத் தளங்களில் வெளியாகி பலராலும் தொடர்ந்து பகிரப்பட்டது. சம்பந்தப்பட்ட தரப் பினர் வெகுண்டதால் நிகழ்ந்த கலவரத்தில் அரசு வாகனங்கள் கொளுத்தப்பட்டன. போலிசார் உட்பட பலர் காயமடைந்தனர், 1000க்கு மேற்பட்டோர் கைது செய் யப்பட்டதுடன் அந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு கலவரம் கட்டுப்படுத்தப் பட்டது.
தீவிர விசாரணை மேற்கொண்ட போலிசார் அந்த ஒலிப்பதிவில் பேசியவர்கள், அதற்கு உதவியாக இருந்தவர்கள் என 4 பேரை பேராவூரணியில் கைது செய்தனர்.
அந்த ஒலிப்பதிவு சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்டு வெளியிடப் பட்டதாக விசாரணையில் தெரிய வந்ததையடுத்து பட்டுக்கோட்டை அருகே உள்ள கரிசல்காடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், புதுக்கோட்டை மாவட்டம் சித்தன் னவாசல் பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் முருகேசன் ஆகியோர் சிங்கப்பூரிலிருந்து தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
ஒலிப்பதிவில் பேசிய இருவரில் ஒருவரான எம்.சத்தியராஜ், அவதூறு பேச்சைப் பதிவுசெய்து சமூக ஊடகங்களில் பரப்புமாறு ஆலோசனை கூறிய வசந்த், பல்வேறு சமூக ஊடகங்களில் பதிவிட்ட எஸ்.சபரி, எஸ். பாலாஜி, ரெங்கையா ஆகியோ ருடன் வேறு ஒரு இளைஞரும் கைது செய்யப் பட்டனர். இதில் திருவாரூரை சேர்ந்த ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாகவும் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!