திருவண்ணாமலை: திருவண்ணாமலையை அடுத்த குன்னுமுறிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த தினகரன், 35, என்ற கார் ஓட்டுநரை திருவண்ணாமலை புறநகரில் வெட்டிக் கொலை செய்த மூவரை போலிஸ் கைது செய்தது. மேலும் மூவர் தேடப்படுகிறார்கள்.
திருவண்ணாமலை பகுதியில் இருக்கும் ஏரியில் நடந்த மணல் கொள்ளைகள் பற்றி தினகரன், அடிக்கடி அதிகாரி களுக்குத் தகவல் தெரிவித்து வந்ததாகவும் இதுவே கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் போலிஸ் தெரிவித்துள்ளது. விசாரணை நடக்கிறது.

