மாண்டவர் இலங்கையில் உயிரோடு திரிகிறார்

சென்னை: ராமேசுவரத்தைச் சேர்ந்த பரதன் என்ற மீனவர், 1996ஆம் ஆண்டு கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது காணாமல் போய்விட்டார். அப்போது 42 வயதான பரதன், 1996 ஏப்ரல் மாதம் இதர ஐந்து பேருடன் மீன் பிடிக்கச் சென்றபோது அவருடைய படகு புயலில் சிக்கிவிட்டது.

நால்வரும் தப்பிவிட்டனர். பரதன் மாயமானார். அவரைப் பற்றிய தகவலே இல்லை. கடலிலேயே பரதன் மாண்டுவிட்ட தாகக் கருதிய அவருடைய மனை வியும் இரண்டு புதல்விகளும் ஒரு மகனும் சேர்ந்து பரதனுக்கு ஈமச் சடங்குகளைச் செய்து முடித்தனர்.

பரதன், ராஜூ என்ற வேறு ஒரு மீனவரின் பெயரில் மீன்பிடிக்கச் சென்றதன் காரணமாக அரசாங்கத் திடமிருந்து குடும்பத்தினர் இழப் பீடு எதையும் கோரமுடியவில்லை.

பரதனின் தூரத்து உறவின ரான ராஜேஷ் என்பவர் ராமேசு வரத்தில் ஆட்டோ ஓட்டுகிறார்.

அவர் யுடியூப்பில் யாழ்ப்பாண தொலைக்காட்சியில் யாசகர் களைப் பற்றி ஒளிபரப்பப்பட்ட ஒரு காட்சியைப் பார்த்தார்.

அதில் காணப்பட்ட ஒருவர், பரதன் போன்று இருப்பதை அறிந்து அதிர்ச்சியும் ஆச்சர்ய மும் வியப்பும் அடைந்த ராஜேஷ், அந்தப் படத்தை குடும்பத்தின ருக்குக் காட்டினார். படத்தில் கொழும்பு வீதியில் யாசகம் கேட்டு திரிந்து கொண்டிருந்தவர் பரதன் தான் என்பதை எல்லாருமாக உறுதிப்படுத்தினர்.

ஆனால் பரதனின் மனைவி மட்டும் மனநிலைப் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவரால் உறுதியாகத் தெரிவிக்க முடியவில்லை.

மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பரதனை திரும்பக் கொண்டுவர குடும்பத்தினர் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!