சென்னை: திருவான்மியூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த திருப்பதிசாமி என்பவரும் அவரின் மனைவியும் தனஸ்ஸ்ரீ, சாருலதா என்ற தங்கள் இரண்டு பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றனர்.
வீடு திரும்பியபோது மரப்பெட்டியில் இருந்து சத்தம் வரவே திறந்து பார்த்தபோது, இரு குழந்தைகளும் வாந்தி எடுத்தபடி மயங்கிக் கிடந்ததை அடுத்து மருத்துவ மனைக்கு விரைந்தனர். தனஸ்ஸ்ரீ உயிர் இழந்தார். சாருலதா தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். பெட்டிக்குள் ஒளிந்து விளையாடியபோது பெட்டி மூடிக்கொண்டதால் குழந்தைகள் மூச்சுவிடமுடியாமல் போனதாகத் தெரிந்தது.

